யார் இந்த பராக் அக்ரவால்? ட்விட்டர் சிஇஓ ஆகும் இந்தியர்.. டாப் இடத்திற்கு சென்றது எப்படி? பின்னணி - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, November 30, 2021

யார் இந்த பராக் அக்ரவால்? ட்விட்டர் சிஇஓ ஆகும் இந்தியர்.. டாப் இடத்திற்கு சென்றது எப்படி? பின்னணி

 


ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓவாக பராக் அக்ரவால் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அதன் சிஇஓ மற்றும் நிறுவனர் ஜாக் பணியில் இருந்து விலகியதால் தற்போது சிடிஓவாக இருந்த பராக் அக்ரவால் சிஇஓ ஆகி உள்ளார்.சர்வதேச நிறுவனங்கள், முக்கியமாக அமெரிக்காவின் டாப் நிறுவனங்களில் இப்போதெல்லாம் இந்தியர்கள்தான் சிஇஓ உள்ளிட்ட உயர் பொறுப்புகளில் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். மைக்ரோசாப்ட் சிஇஓவாக சத்யா நாடெல்லா செயல்பட்டு வருகிறார்.:  அதேபோல் கூகுள் சிஇஓவாக தமிழரான சுந்தர் பிச்சை செயல்பட்டு வருகிறார். இதேபோல் ஐபிஎம் உள்ளிட்ட மற்ற பெரிய நிறுவனங்களின் சிஇஓவாகவும் இந்தியர்களே உள்ளனர். அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸே தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்தான்.ஜாக்இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து விலகி இருக்க போவதாக அதன் நிறுவனர் மற்றும் சிஇஓ ஜாக் அறிவித்துள்ளார். இந்த நிறுவனம் தனியாக செயல்பட வேண்டிய நேரம் இது. அதன் நிறுவனர்கள் இதை கண்காணிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதனால் நான் பதவி விலகுகிறேன். மிகவும் திறமையான, நேர்மையான, தாழ்மையான குணம் கொண்ட பராக் அக்ரவால் இந்த நிறுவனத்தின் சிடிஓவாக சிறப்பாக செயல்பட்டார். அவர் இனி சிஇஓவாக செயல்படுவார் என்று ஜாக் அறிவித்துள்ளார்.பராக் அக்ரவால்இது குறித்து பராக் அக்ரவால் கொடுத்துள்ள விளக்கத்தில், ஜாக்கிற்கு கீழே நாங்கள் உருவாக்கிய அனைத்தையும் மேம்படுத்தும் பொறுப்பு எனக்கு உள்ளது. அதில் நான் முழு கவனம் செலுத்துவேன். எனக்கு முன் இருக்கும் வாய்ப்புகள் காரணமாக இப்போதே முழு எனர்ஜியோடு இருக்கிறேன். நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் வகையிலும், மக்களுக்கு சிறந்த அனுபவத்தை தரும் வகையிலும் ட்விட்டரை முன்னோக்கி கொண்டு செல்வேன், என்று பராக் அக்ரவால் குறிப்பிட்டுள்ளார்.யார் இவர்சரி பராக் அக்ரவால் யார்.. அவர் எப்படி இந்த உயரிய பொறுப்பிற்கு வந்தார் என்று இங்கே பார்க்கலாம். 1. பராக் அக்ரவால் இந்தியாவை சேர்ந்தவர். மஹாராஷ்டிராவில் வசித்து வந்த இவர் மும்பையில் இருக்கும் ஐஐடியில்தான் கம்ப்யூட்டர் சைன்ஸ் பிரிவில் பிடெக் படித்து இருக்கிறார். 2.அதன்பின் மேல்படிப்பிற்காக அமெரிக்க சென்றவர் அங்கேயே ஸ்டான்போர்ட் பல்கலையில் படித்து பிஎச்டி பட்டம் பெற்றுள்ளார்.செட்டில் ஆனார்3. அங்கேயே பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி பின் அங்கேயே குடியுரிமை பெற்று செட்டில் ஆகியுள்ளார். பின்னர் மைக்ரோசாப்ட் நிறுவனம், யாஹூ நிறுவனங்களில் சிறிய அளவிலான எஞ்சினியர் தொடங்கி பெரிய அளவிலான டீம் லீடர் பொறுப்புகளை கூட வகித்து இருக்கிறார். 4. அங்கு அவர் பெற்ற அனுபவம் காரணமாக 2011ல்தான் ட்விட்டரில் இவர் இணைந்தார். அங்கு தொடக்கத்தில் சாதராண எஞ்சினியராகவே இணைந்துள்ளார்.பொறுப்புகள்5. அவருக்கு இருந்த திறமைகள், ட்விட்டரில் அவர் பரிந்துரைந்த பல்வேறு மாற்றங்கள் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக நிறுவனத்தில் வளர்ந்துஎன்ற பொறுப்பை பெற்றார். 6. 2016-2017ல் இவர் கொண்டு வந்த மாற்றங்கள் ட்விட்டரை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நிறுவனத்தின் போர்ட் உறுப்பினர்கள் இடையே அறிமுகம் ஆகிறார். அப்போதுதான் ட்விட்டரில் அதிக அளவில் புதிய நபர்கள் இணைய தொடங்கினார்கள்.சிடிஓ7. இதன் காரணமாக ட்விட்டரில் சிடிஓ எனப்படும் டெக்னிக்கல் தலைவர் பொறுப்பு உருவாக்கப்பட்டு அந்த பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டிருந்தது. 8. இந்த பொறுப்பு மூலம் ட்வீட்டரில் ஏஐ தொழில்நுட்பம், மெஷின் லேர்னிங் ஆகிய பணிகளை இவர் கவனித்து வந்து இருக்கிறார். ட்விட்டர் ஸ்பேஸ் தொடங்கி பல புதிய வசதிகள் உச்சம் தொட இவர் காரணமாக இருந்தார்.கூட்டம் நடந்தது9. 2019ல் பராக் அக்ரவால் ப்ராஜக்ட் ப்ளூ ஸ்கை திட்டத்தின் தலைவர் ஆனார். ட்வீட்டர் நிறுவனம் பொய்யான செய்திகளை களைய உருவாக்கிய குழுவின் தலைவராக ஜாக் மூலம் பராக் அக்ரவால் நியமிக்கப்பட்டார். ஆனால் இதில் பராக் அக்ரவால் செய்த சில பணிகள் விமர்சனங்களுக்கு உள்ளானது. 10. இதையடுத்து ஜாக் பதவி விலகும் முடிவிற்கு சில மாதங்களுக்கு முன் வந்த போது, பலரை சிஇஓவாக நியமிக்க ஆலோசனை செய்துள்ளனர். பல கட்ட இன்டர்வியூக்கு பிறகு பராக் அக்ரவால் தேர்வாகி உள்ளார். இது போர்ட் குழுவின் ஒருமித்த முடிவு ஆகும். ஆனால் ஜாக் இதற்கு முன்பில் இருந்தே பராக் அக்ரவாலை சிஇஓ ஆக்கும் திட்டத்தில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment