லஞ்ச ஒழிப்பு ஐஜி, கோவை காவல் ஆணையர...தமிழகம் முழுவதும் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, November 18, 2021

லஞ்ச ஒழிப்பு ஐஜி, கோவை காவல் ஆணையர...தமிழகம் முழுவதும் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்


தமிழக லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் வித்யா குல்கர்னி சிபிஐ அயல்பணிக்கு சென்ற காரணத்தால் லஞ்ச ஒழிப்புத்துறைக்குக்கு புதிய இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார், கோவை காவல் ஆணையர், மாவட்ட எஸ்பிக்கள் உட்பட 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் எஸ் கே பிரபாகர் பிறப்பித்துள்ளார். மாற்றம் பெற்ற அதிகாரிகள் விவரம் வருமாறு1. லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் வித்யா குல்கர்னி அயல்பணியாக சிபிஐக்கு சென்றதால் கோவை காவல் ஆணையராக பதவி வைக்கும் தீபக் எம் தாமோர் இடமாற்றம் செய்யப்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்2. சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சதீஷ்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு கோவை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். 3. பணியமைப்பு பிரிவு டிஐஜி பிரபாகரன் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை சட்டம் ஒழுங்கு (கிழக்கு) இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். 4. சென்னை சட்டம் ஒழுங்கு (கிழக்கு) இணை ஆணையர் ராஜேந்திரன் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை போக்குவரத்து காவல் (தெற்கு)இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.5. சென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையர் (தெற்கு) செந்தில்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை பணியமைப்பு பிரிவு டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். 6. திருச்சி மாவட்ட எஸ்.பி, பா.மூர்த்தி இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை, சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார். 7. போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை எஸ்.பி, சுஜித்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு திருச்சி மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.8. சென்னை புளியந்தோப்பு துணை ஆணையர் ராஜேஷ் கண்ணன் இடமாற்றம் செய்யப்பட்டு வேலூர் மாவட்ட எஸ்.பி-ஆக நியமிக்கப்பட்டுள்ளார். 9.நெல்லை மாவட்ட எஸ்.பி, மணிவண்ணன் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை புளியந்தோப்பு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். 10. சென்னை நிர்வாக பிரிவு ஏஐஜி பி.சரவணன் இடமாற்றம் செய்யப்பட்டு நெல்லை மாவட்ட எஸ்.பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.11. வேலூர் மாவட்ட எஸ்.பி, செல்வகுமார் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை நிர்வாகப் பிரிவு ஏஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். 12. அயல் பணியில் இருந்து தமிழகம் திரும்பிய எஸ்.பி, ரம்யா பாரதி சென்னை சைபர் அரங்கம் எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவி ஐஜி பதவியிலிருந்து எஸ்பி பதவிக்கு தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் இவர் கூடுதலாக செயலாக்கம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பணிகளையும் கவனிப்பார்.இவ்வாறு உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment