மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கைக்கு Bonafide சான்றிதழ் வழங்குதல் சார்ந்து கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, September 20, 2021

மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கைக்கு Bonafide சான்றிதழ் வழங்குதல் சார்ந்து கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல் முறைகள் ந.க.எண்.1770 /®2/ 2021 நாள்.20.09.2021 
 
பொருள்: 
 
உயர்கல்வி 2021 -2022 ஆம் கல்வியாண்டில் வேளாண்மை, கால்நடை மருத்துவம் உள்ளிட்ட இளநிலை படிப்பிற்கான சேர்க்கை நடைபெறவுள்ளது - அரசுப் பள்ளி மாணவர்களுக்கு BONAFIDE சான்றிதழ் வழங்குதல் சார்ந்து. பார்வை: 1. கோயம்புத்தூர், வேளாண்மை பல்கலைக்கழக அறிவிப்பு நாள். .09.2021 2. சென்னை -51 தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் அறிவிப்பு .09.2021 3. மாணவியரின் விண்ணப்பம் பெறப்பட்ட நாள். 13.09.2021 4. தமிழ்நாடு சட்டம் 14 /2021 (Government Schools Act 2021) *=*=fs * 
 
பார்வை 1 மற்றும் 2-ல் கண்டுள்ளப்படி கோயம்புத்தூர், வேளாண்மை பல்கலைக் கழகம் மற்றும் சென்னை, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் 2021 - 2022 ஆம் ஆண்டிற்கான இளநிலை படிப்புகளில் சேருவதற்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 
 
பார்வை 4-ல் கண்டுள்ள தமிழ்நாடு சட்டம், 14 | 2021 (Government Schools Act, 2021)- இன்படி 2021 2022 ஆம் ஆண்டில் அனைத்து தொழில் சார்ந்த இளநிலை படிப்புகளில் சேருவதற்கு 6 முதல் 12-ஆம் வகுப்புகள் வரை முழுவதும் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 
 
 
அதன்படி மாணவர்கள் 6 முதல் 12ஆம் வகுப்புகள் வரை முழுவதும் அரசுப் பள்ளியில் பயின்றதற்கான BONAFIDE சான்றிதழ் வேண்டி விண்ணப்பம் அளித்து வருகின்றனர். எனவே, 6 முதல் 12 -ம் வகுப்புகள் வரை முழுவதும் அரசு பள்ளியில் பயின்று BONAFIDE Certificate கோரும் மாணவர்களுக்கு 1.Admission Register, 2.Nominal Roll 3.Transfer Certificate ஆகிய ஆவணங்களின் அடிப்படையில் கீழ்க்கண்ட வகைகளின் படி BONAFIDE Certificate பள்ளித் தலைமையாசிரியர் வழங்க வேண்டும். 
 
வகை-1 
 
ஒரு மாணவர் 6 முதல் 12 வகுப்புகள் வரை முழுவதும் ஒரே அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்றிருந்தால் அப்பள்ளியின் தலைமையாசிரியர் 1.Admission Register, 2.Nominal Roll 3.Transfer Certificate ஆகிய ஆவணங்கள் அடிப்படையில் அம்மாணவருக்கு Bonafide Certificate வழங்க வேண்டும்
 
 
வகை-2

ஒரு மாணவர் 6 முதல் 10- ஆம் வகுப்புகள் வரை ஒரு அரசு உயர்நிலைப்பள்ளியிலும் 11 மற்றும் 12 -ஆம் வகுப்புகள் வேறொரு அரசு மேல்நிலைப்பள்ளியிலும் பயின்றிருந்தால், உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் மேற்சொன்ன அதே ஆவணங்கள் அடிப்படையில்
அம்மாணவருக்கு 6 முதல் 10 ஆம் வகுப்பு பயின்றதற்கான Bonafide Certificate வழங்க வேண்டும். இந்த Bonafide Certificate - ஐ மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் சார்ந்த உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியரை தொடர்பு கொண்டு நேரடியாக பெறுதல் வேண்டும்.

-2- 
இதனை அடிப்படையாக கொண்டு அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் 6 முதல் 10 ஆம் வகுப்பு மற்றும் 11-12 ஆம் வகுப்பு பயின்ற விவரத்தினை ஒரே Bonafide Certificate படிவத்தில் தனித்தனியாக பூர்த்தி செய்து Bonafide Certificate வழங்க வேண்டும். 
 
வகை-3 
 
ஒரு மாணவர் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஒரு அரசு நடுநிலைப்பள்ளியிலும் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகள் ஒரு அரசு உயர்நிலைப்பள்ளியிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியிலும் பயின்றிருந்தால் மேற்சொன்ன அதே அறிவுரைகளின் படி முதலில் நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர் 6 முதல் 8 ஆம் வகுப்பு பயின்றதற்கான Bonafide Certificate வழங்க வேண்டும். இதன் அடிப்படையாக கொண்டு உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் 6 முதல் 10 ஆம் வகுப்புகள் பயின்றதற்கான Bonafide Certificate வழங்க வேண்டும். இதனடிப்படையில் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் 6 முதல் 12 ஆம் வகுப்பு பயின்றதற்கான Bonafide Certificate வழங்க வேண்டும். 
 
மேலும் 6 முதல் 12 ஆம் வகுப்புகள் வரை 3-க்கு மேற்பட்ட அரசு பள்ளிகளில் பயின்றிருந்தாலும் இதே அறிவுரைகளின் படி மாணவர்கள் Bonafide Certificate கோரிய அன்றைய தினமே பள்ளித் தலைமையாசிரியர்கள் மாணவர்களுக்கு இரு பிரதிகளில் வழங்கி இத்துடன் கீழ்க்கண்ட ஆவணங்களை (நகல்) இணைத்து 1.Admission Register, 2.Nominal Roll 3.Transfer Certificate தலைமையாசிரியர் மேலொப்பமிட்டு உடன் முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
 
ஒம்/- ஜே.ஆஞ்சலோ இருதயசாமி முதன்மைக் கல்வி அலுவலர், கடலூர் 
 
பெறுநர் 
 
அனைத்து அரசு நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள். கடலூர் மாவட்டம். நகல் மாவட்டக் கல்வி அலுவலர்கள், கடலூர் / வடலூர்! சிதம்பரம் / விருத்தாசலம்,


 

No comments:

Post a Comment