முகத்தின் மங்கிய நிறத்தை மாற்றும் அரிசி மாவு !! - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, September 16, 2021

முகத்தின் மங்கிய நிறத்தை மாற்றும் அரிசி மாவு !!

முகத்தின் மங்கிய நிறத்தை மாற்றும் அரிசி மாவு !! 
 
அரிசியில் உள்ள டைரோசினேஸ் தோலில் மெலாமின் உருவாகுவதை கட்டுப்படுத்துகிறது. இதுவே தோல் பகுதியில் உள்ள அதிகபட்ச எண்ணெய் மற்றும் சீபம் போன்றவற்றை நீக்குகிறது. உடலில் இருக்கும் ஸ்ட்ரெச் மார்க் விரட்டி அடிக்க அரிசி மாவு உதவும். அரிசிமாவுடன் மஞ்சள் தூள், காய்ச்சாத பசும் பால் சேர்த்து பேஸ்ட் போல் குழைக்கவும். 
 
இதை ஸ்ட்ரெச் மார்க் இருக்கும் இடங்களில் தடவி விடவும். 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். தினமும் குளிப்பதற்கு அரைமணி நேரம் முன்பு இதை தடவி வந்தால் தழும்புகள் மறைந்து சருமம் சீராக மாறும். அரிசி மாவு 3 டீஸ்பூன், பன்னீர் 3 டீஸ்பூன் மற்றும் தயிர் 3 டீஸ்பூன் சேர்த்து நன்றாக குழைத்து முகத்தில் பேக் போடவும். 
 
பிறகு நன்கு மசாஜ் செய்து விடவும். அப்படியே உலரவிடவும். 30 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இந்த ஃபேஸ் பேக் அழுக்குகளை அகற்றும். முகத்தின் மங்கிய நிறத்தை மாற்றும். அரிசி மாவை சிறிது நீரில் கரைத்து ஐஸ்க்யூப்களில் ஊற்றி வைக்கவும். அவை ஐஸ்கட்டிகளாக உறைந்ததும் அதை கொண்டு சருமத்தில் முகம் முழுக்க எங்கெல்லாம் அரிப்பு பிரச்சனை உள்ளதோ அங்கெல்லாம் ஒத்தடம் கொடுக்கவும். 
 
தினமும் 15 நிமிடங்கள் வரை இப்படி செய்து வந்தால் சரும அழற்சி நீங்கும். அரிசி மாவுடன் சர்க்கரை சேர்த்து உருட்டி முகத்தில் இலேசாக மசாஜ் செய்யவும். முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மூக்கு நுனிகள் கழுத்தில் இருக்கும் கருமைகள் போன்ற இடங்களில் நன்கு ஸ்கரப் செய்து பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். பிறகு ஐஸ்கட்டிகள்கொண்டு முகத்துக்கு ஒத்தடம் கொடுக்கவேண்டும். முதல்முறை செய்யும் போதே முகத்தில் பளிச் பார்க்கலாம். மேக் அப் கலைப்பதற்கு அதிக நேரம் பிடிக்கிறது என்பவர்கள் எளிதாக முகத்தை சுத்தம் செய்ய அரிசி மாவு பயன்படுத்தலாம். அரிசிமாவை பன்னீரில் குழைத்து முகத்தில் தடவி இலேசாக ஐந்து நிமிடங்கள் தேய்த்து கழுவிய பிறகு முகத்தை பார்த்தால் மேக் அப் முழுவதும் நீங்கி முகம் பளிச்சென்று மின்னும்.

No comments:

Post a Comment