வாழைப்பூவின் மருத்துவ நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம் !! - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, September 18, 2021

வாழைப்பூவின் மருத்துவ நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

வாழைமரத்தில் உள்ள பூ, இலை, காய், பழம், தண்டு என அனைத்தும் நமக்கு பயன் தருகிறது. அந்த வகையில் வாழைப்பூவின் மருத்துவ நன்மைகளை பற்றி இதில் பார்ப்போம். வாழைப்பூவில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புசத்து, புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் பி, சி ஆகியவை உள்ளன. வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள கொழுப்புத் தன்மை குறைந்து ரத்த ஓட்டம் சீராகும். 

இதனால் ரத்தச்சோகை நோய் வராது. வாழைப்பூவில் உள்ள துவர்ப்பு தன்மை ரத்தத்தில் கலக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. வாய்ப்புண், வாய் துர்நாற்றம், உள்மூல, வெளி மூல புண்கள் போன்ற பிரச்சனைகளுக்கு வாழைப்பூ பயனளிக்கிறது. தவறான உணவு முறை பழக்கம் மற்றும் மன உளைச்சலால் செரிமான கோளாறு, வயிற்றில் புண்கள் போன்ற பிரச்சனைகள் உருவாகிறது. 

இதனை சரிசெய்ய வாரம் ஒருமுறையாவது வாழைப்பூவை சமைத்து சாப்பிட வேண்டும். பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறு மற்றும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு வாழைப்பூ நல்ல தீர்வு தரும். உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து அதில் நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும். வாழைப்பூவை வேக வைத்தோ அல்லது பொரியல் செய்தோ சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

No comments:

Post a Comment