சென்னைப் பல்கலை. தொலைதூரப் படிப்புக்கான தேர்வுகள் செப்.27-ல் தொடக்கம் - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, September 18, 2021

சென்னைப் பல்கலை. தொலைதூரப் படிப்புக்கான தேர்வுகள் செப்.27-ல் தொடக்கம்

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளுக்கான தேர்வுகள் செப்டம்பர் 27-ம் தேதி தொடங்கவுள்ளன. சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் இளங்கலை, முதுகலை (எம்பிஏ உட்பட), தொழிற்கல்வி, டிப்ளமோ, முதுகலை டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகள் (யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்டவை) நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் படிப்புகளுக்கு 2021-ம் ஆண்டு மே மாதம் தேர்வு நடைபெற்றிருக்க வேண்டும். கரோனா காரணமாகத் தள்ளிப்போயிருந்த இந்தப் படிப்புகளுக்கான தேர்வுகள் செப்டம்பர் 27-ம் தேதி தொடங்கவுள்ளன. மேலும் இதற்கான தேர்வுக்கால அட்டவணையும் ideunom.ac.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டை செப்டம்பர் 20-ம் தேதி அன்று அதே இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தத் தகவலை, பல்கலைக்கழகப் பதிவாளர் இராம.சீனுவாசன் தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்களை www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம்.

No comments:

Post a Comment