இல்லம் தேடிக் கல்வி- தன்னார்வலர்கள் தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, November 10, 2021

இல்லம் தேடிக் கல்வி- தன்னார்வலர்கள் தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள்

 


.com/img/a/

கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக 1 முதல் 8 வகுப்புகள் வரை பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளிமற்றும் இழப்புகளை ஈடுசெய்வதற்காகத் தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி 1 முதல் 1 % மணிநேரம் ( மாலை 5.00 மணிமுதல் 7.00 மணிக்குள் ) கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையிலும் இடைநிற்றலை முற்றிலும் களைவதற்கும் " இல்லம் தேடிக் கல்வி " செயல்படுத்தப்பட உள்ளது. பள்ளி நேரங்களைத் தவிர , மாணவர்கள் வசிப்பிடம் அருகே சிறிய குழுக்களில் தன்னார்வலர்கள் மூலம் மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது . இத்திட்டம் முழுவதும் தன்னார்வத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் . விழிப்புணர்வு நடவடிக்கைகள் தன்னார்வலர்களுக்கு இந்த முயற்சியில் பங்கேற்க ஒரு திறந்த அழைப்பை வழங்கும் . தன்னார்வலர் தேர்ச்சியானது , தன்னார்வர் கொடுத்த தரவுகளை சரிபார்த்தல் , பின்புல ஆய்வு , கல்வியில் முன் அனுபவம் , குழந்தைகளை கையாளும் திறன் , தன்னார்வலர் நேரடி சந்திப்பு மற்றும் கற்றல் கற்பித்தல் பயிற்சிக்கு தயார் நிலை அறிதல் ஆகியவற்றின் மூலம் நடைபெறும் . தன்னார்வலரைப் பயன்படுத்துவதற்கான அனைத்து தேடிக் கல்வி " நிலைகளையும் இணையதளம் பொருட்டு " இல்லம் எளிதாக்கும் ( http://illamthedikalvi.tnschools.gov.in/ ) மற்றும் இணையவழி வாயிலாக தன்னார்வலர்கள் விண்ணப்பம் உருவாக்கப்பட்டுள்ளது . இவற்றைப் பயன்படுத்தி பள்ளி - மாணவர் தன்னார்வலர் - கிராம தொடர்பு தடையின்றி நடைபெறும். இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் எந்த காலகட்டத்திலும் தன்னார்வலர் இந்த பணிக்கு சரியான நபர் இல்லை என அறியப்பட்டால் ( மாநில , மாவட்ட , பள்ளி அளவில் ) , உடனடியாக அவர் அப்பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்.

Illam thefi Kalvi Instructions - Download here

No comments:

Post a Comment