தினம் ஒரு தகவல் கடல் நீ்ர்மட்டமும்... கணக்கீடு முறையும் - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, October 13, 2021

தினம் ஒரு தகவல் கடல் நீ்ர்மட்டமும்... கணக்கீடு முறையும்

கடல் நீ்ர்மட்டமும்... கணக்கீடு முறையும்... ஓர் இடத்தின் உயரத்தை குறிப்பிட நாம் கடல் நீரின் மட்டத்தை அடிப்படையாக பயன்படுத்துகிறோம். ஆனால் நடைமுறையில் பூமியில் கடல் நீர் மட்டம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பது இல்லை. 

அத்துடன் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, எனவே நாமாக சராசரி கடல் மட்டம் என ஒன்றை கணக்கிட்டு அதைப் பயன்படுத்துகிறோம். எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,848 மீட்டர். இவ்வாறு கூறுவது, எவரெஸ்ட் சிகரமானது சராசரி கடல் மட்டத்தில் இருந்து அவ்வளவு உயரத்தில் உள்ளது என்பதைக் குறிக்கிறது. 

ஊர் எவ்வளவு உயரத்தில் உள்ளது என்பதும் இப்படித்தான் குறிப்பிடப்படுகிறது, உங்கள் ஊரில் ெரயில் நிலையம் இருக்குமானால் நடைபாதையின் கோடியில் உள்ள பெயர்ப் பலகையைப் பார்த்தால் போதும். அதன் அடிப்புறத்தில் above 245 MSL என்று எழுதப்பட்டிருந்தால் உங்கள் ஊரானது சராசரி கடல் மட்டத்திலிருந்து 245 மீட்டர் உயரத்தில் உள்ளது என்பதை அது காட்டும். MSL என்பது சராசரி கடல் மட்டம் (Mean Sea Level) என்பதைக் குறிப்பதாகும்.. சராசரி கடல் மட்டம் என்று கூறுவதற்கு காரணம் உள்ளது. நீச்சல் குளத்தில் அல்லது ஓர் ஏரியில் நீர்மட்டம் அதிக சலனமற்று இருக்கும். 

மாறாக, கடல்களில் எப்போதும் அலைகள் உண்டு. சில சமயங்களில் பெரிய அலைகளும் இருக்கும். இதற்கு காரணம் பூமி மீது சந்திரன் செலுத்தும் ஈர்ப்பு சக்தி. காற்றும் ஒரு காரணமே. கடல்களில் ஏற்றம் இறக்கம் என உண்டு. குறிப்பாக துறைமுக பகுதிகளில் இது நன்கு புலப்படும். அதாவது ஒரு சமயம் கடல் நீரானது துறைமுகத்துக்குள் வெள்ளம் போலப் பாயும். அது ஏற்றம். இன்னொரு சமயம் வெள்ளம் போன்று துறைமுகத்திலிருந்து கடல் நீர் வெளியேறும். இது இறக்கம். 

இப்படியாகக் கடல் நீரின் மட்டம் மாறிக் கொண்டே இருக்கிறது. கடந்த நூற்றாண்டில் நடந்த ஆய்வுப்படி விசாகப்பட்டினத்தில் அதாவது வங்கக்கடலின் நீர்மட்டம், மும்பையில் அதாவது அரபிக்கடலின் நீர்மட்டத்தை விட 30 சென்டிமீட்டர் உயரமாக உள்ளது. காற்றின் போக்கு, கடலில் கலந்துள்ள உப்பு அளவு போன்றவை இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. பிரச்சினை இத்துடன் நிற்கவில்லை. பூமியின் சராசரி வெப்பம் அதிகரித்து வருவதால் வட, தென் துருவப் பகுதிகளில் பனிப்பாளங்கள் மெல்ல உருகிவருவதாலும் கடலின் நீர் மட்டம் ஆண்டுக்குச் சராசரியாக 3.2 மில்லி மீட்டர் வீதம் உயர்ந்து வருகிறது. இவையெல்

No comments:

Post a Comment