Google Pay மூலம் யுபிஐ பணப் பரிவத்தனை : புதிய விதிமுறைகள் - Kalviupdate

Latest

 


1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, September 2, 2024

Google Pay மூலம் யுபிஐ பணப் பரிவத்தனை : புதிய விதிமுறைகள்

கூகுள் பே (Google Pay) மூலம் யுபிஐ பணப் பரிவத்தனை செய்யும் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் - என்பிசிஐ (National Payments Corporation of India (NPCI) கொண்டு வந்துள்ள யுபிஐ சர்க்கிள் விதிகள் (UPI Circle Rules) அமலாகி இருக்கின்றன.

 இந்த விதிகள் மூலம் 2 அக்கவுண்ட்கள், ரூ.15000 உச்ச வரம்பு போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளும் வர இருக்கின்றன. இந்த யுபிஐ சர்க்கிள் விதிகளால் என்னென்ன வரப்போகிறது  சொல்லப்போனால், இந்த விதிகள் கூகுள் பே கஸ்டமர்களுக்கு மட்டுமல்ல, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்களை வைத்திருக்கும் அனைத்து கஸ்டமர்களுக்கும் அமலுக்கு வருகிறது.
Click here to more government orders 
ஆனால், முதலில் கூகுள் பே நிறுவனம் இந்த விதிகளை அமலுக்கு கொண்டுவருவதை உறுதிப்படுத்தி இருக்கிறது. இதனால், அந்த கஸ்டமர்களே இப்போது முதலில் இந்த விதிகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

 பேங்க் அக்கவுண்ட் வைத்திருக்கும் கஸ்டமர்கள் கூகுள் பே ஆப்பில் ஒரு பேங்குக்கு ஒரு யுபிஐ அக்கவுண்ட்டை மட்டுமே ஓப்பன் செய்ய முடியும். ஏனென்றால், ஒரு மொபைல் நம்பர் மூலம் யுபிஐ அக்கவுண்ட் (UPI Account) ஓப்பன் செய்யப்படுவதால், ஒன்றுக்கு மேல் கொடுத்தால், ஓடிபி வெரிபிகேஷனில் சிக்கல் ஏற்படும் என்பதால், இந்த யுபிஐ விதிகள் நீடிக்கிறது. இந்த ஒரேவொரு அக்கவுண்ட் விதிகளிலேயே ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா - ஆர்பிஐ (Reserve Bank of India) மாற்றங்களை செய்துள்ளது. அதாவது, ஒரே பேங்க் அக்கவுண்ட்டில் இரண்டு யுபிஐ அக்கவுண்ட்டை ஓப்பன் செய்து கொள்ளலாம். அதில் பிரைமரி மற்றும் செகண்டரி என்று அக்கவுண்ட்கள் பிரிக்கப்பட்டு, பணம் அனுப்புவதில் உச்ச வரம்பை நிர்ணயிக்கலாம்.

இதற்கு ஒரேவொரு மொபைல் நம்பர் இருந்தால் போதும் என்று தெரிவித்தது. இந்த மாற்றங்களையே யுபிஐ சர்க்கிள் விதிகளாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் கொண்டு வந்துள்ளது. இந்த யுபிஐ சர்க்கிள் மூலம் ஒரே பேங்க் மூலம் இரண்டு யுபிஐ ஐடிகளை பயன்படுத்தலாம். ஆகவே, 2ஆவதாக ஓப்பன் செய்யப்படும் யுபிஐ ஐடிக்கு எந்தவொரு பேங்க் அக்கவுண்ட்டும் தேவை கிடையாது. அதாவது, பேங்க் அக்கவுண்ட்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை வைத்திருக்கும் நபர் பிரைமரி பயனர் (Primary User) ஆவார். இவர் அந்த நம்பரில் வழக்கம் போல யுபிஐ ஐடியை ஓப்பன் செய்து கொள்ளலாம். அதன்பிறகு 2ஆவது முறையாக செகண்டரி பயனர் (Secondary User) யுபிஐ ஐடியையும் அவரால் உருவாக்கி கொள்ள முடியும்.

 இந்த 2ஆவது யுபிஐ ஐடிக்கு லிமிட் விதிக்கவும் அவரால் முடியும்.அதிகபட்சமாக மாதத்துக்கு ரூ.15,000 செலவு அனுமதி வழங்கலாம். அதேபோல இந்த தொகைக்குள்ளாக ரூ.5000 அல்லது ரூ.10000 என்றும் லிமிட் செய்து கொள்ளவும் பிரைமரி பயனரால் முடியும். ஆகவே, இந்த குறிப்பிட்ட தொகையை மட்டுமே செகண்டரி பயனர் செலவழிக்க முடியும். 

அதே நேரத்தில், செகண்டரி பயனர் பேமெண்ட்கள் செய்யும்போது, அதற்காக அனுமதியை பிரைமரி பயனரே வழங்கி கொள்ளலாம். இப்படி இருப்பதால், எந்த வொரு சிக்கலும் இன்றி இரண்டு யுபிஐ ஐடிகள் மூலம் டிஜிட்டல் பேமெண்ட்களை செய்து கொள்ள முடியும். மேலும், தேவையில்லை என்றால், செகண்டரி பயனரை எளிதாக நிறுத்தி வைக்கவும் அல்லது ஒரு பயனரை தூக்கிவிட்டது மற்றொரு பயனரை புதிதாக கொண்டுவரவும் அனுமதி வழங்கப்படுகிறது.

 அதிகபட்சமாக 5 பயனர்களை சேர்க்க முடியும்.இந்த விதிகளுக்கு உட்பட்டே இப்போது, கூகுள் பே நிறுவனம், யுபிஐ சர்க்கிள் ஆப்ஷனை கொண்டுவர இருக்கிறது.

 


ஆகவே, அடுத்த சில நாட்களில் கூகுள் பே ஆப்பில் பல்வேறு யுபிஐ ஐடிக்களை உருவாக்கி கொள்ளலாம். மேலும், செகண்டரி பயனரின் மொபைல் நம்பரானது, பிரைமரி பயனரில் காண்டாக்ட் லிஸ்ட்டில் இருக்க வேண்டும். அதேபோல அவருக்கு யுபிஐ ஐடி இருக்க வேண்டும். இதை பிரைமரி பயனர் உருவாக்கலாம்.

No comments:

Post a Comment