தூத்துக்குடி அரசு பள்ளி மாணவர்களை சொந்த செலவில் விமானத்தில் சென்னை அழைத்து வந்த காவலர்.. நெகிழ்ச்சி - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, October 4, 2025

தூத்துக்குடி அரசு பள்ளி மாணவர்களை சொந்த செலவில் விமானத்தில் சென்னை அழைத்து வந்த காவலர்.. நெகிழ்ச்சி

 educationtour2-1759553551

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தலைமை காவலராக பணியாற்றும் பிராபகரன், தூத்துக்குடி அரசு பள்ளியில் தன்னுடன் படித்த நண்பர்கள் சிலரை ஒருங்கிணைத்து, பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் துணையோடு கல்வி, பண்பு, ஒழுக்கம் போன்றவற்றில் சிறந்து விளங்கிய ஏழ்மையான 4 மாணவர்கள், 9 மாணவிகள் என 13 பேரை தேர்வு செய்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து வந்து கல்வி சுற்றுலா ஏற்பாடு செய்துள்ளார். அவரது செயலை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.


அரசு பள்ளியில் படித்த பலர் உயர் பதவிகளிலும், நல்ல நிலையிலும் இருக்கிறார்கள். அவர்களில் பலருக்கும் உள்ள ஆசை.. தான் படித்த பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகள் கல்வி, பண்பு ஒழுக்கம் போன்றவற்றில் சிறந்து விளங்க வேண்டும் என்பது தான்.. அதற்காக தங்களால் முடிந்த ஏதாவது ஒன்றை நோக்கத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். அப்படித்தான் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலை பள்ளியில் படித்து, காஞ்சிபுரத்தில் ஏட்டாக உள்ள பிரபாகரனுக்கு ஏற்பட்டுள்ளது. அவர் செய்த செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள். இதுபற்றி விரிவாக பார்ப்போம்.


தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலை பள்ளியில் அசோக் பிரபாகரன் என்பவர் 1996-ம் ஆண்டு படித்தார். அசோக பிரபாகரன் தற்போது காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒரு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார்

ஏட்டு பிரபாகரனுக்கு தான் படித்த பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகள் கல்வி, பண்பு ஒழுக்கம் போன்றவற்றில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பி உள்ளார். இதன்படி கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலை பள்ளியில் தன்னுடன் படித்த நண்பர்கள் சிலரை ஒருங்கிணைத்து, பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் துணையோடு கல்வி, பண்பு, ஒழுக்கம் போன்றவற்றில் சிறந்து விளங்கிய ஏழ்மையான 4 மாணவர்கள், 9 மாணவிகள் என 13 பேரை தேர்வு செய்தார்.


அவர்களை கல்வித்துறை அதிகாரிகள் அனுமதியோடு, பள்ளி தலைமை ஆசிரியருடன், அவரது வழிகாட்டுதலோடு 3 ஆசிரியர்கள் 13 மாணவ- மாணவிகளையும் தனது சொந்த செலவில், தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து வர செய்தார்.


2 நாள் சென்னை பயணமாக வந்த மாணவ-மாணவிகளை அசோக் குமார் நேரடியாக சென்று வரவேற்றார். பின்னர் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி., அடையாறு புற்றுநோய் ஆஸ்பத்திரி, அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம், தலைமைசெயலகம், மென்பொருள் நிறுவனம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை மாணவ- மாணவிகளை பார்க்க வைத்தார். இதன்படி கல்வி சுற்றுலா சென்ற மாணவ-மாணவிகள் ஆர்வமாக ஒவ்வொரு இடத்தையும் பார்த்து தெரிந்து கொண்டார்கள்.


2 நாட்கள் பயணத்தை முடிந்து கொண்டு மாணவ-மாணவிகளை ஆசிரியர்களோடு பாதுகாப்பாக வந்தே பாரத் ரெயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். இந்த செயலை செய்து தலைமை காவலர் அசோக் பிரபாகரனையும் அவரது நண்பர்களான முன்னாள் மாணவர்களையும், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் கயத்தாறு ஊர் மக்கள் வெகுவாக பாராட்டினார்கள். உங்கள் ஊரில் இப்படி கல்விக்காக உதவி செய்பவர்கள், நீங்கள் படிக்கும் போது உதவி செய்த நல்உள்ளங்களை பற்றி கமெண்ட்டில் கூறுங்கள்.

No comments:

Post a Comment