இரயில்வே பாதுகாப்புப் படை (RPF) மற்றும் இரயில்வே பாதுகாப்பு சிறப்பு படை (RPSF) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Sub Inspector பணிக்கென காலியாக உள்ள 4208 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Sub Inspector பணிக்கு தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.35,400/- மாத ஊதியமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் தற்போது விண்ணப்பதாரர்கள் சரியாக விண்ணப்பித்துள்ளனரா என்பதை சரிபார்க்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு http://www.rrbapply.gov.in/ எனும் அதிகாரபூர்வ முகவரியை பார்வையிடவும்.
No comments:
Post a Comment