Indian railway jobs: இந்தியன் ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு Last date 13.10.2024 & 26.10.2024 - Kalviupdate

Latest

 


1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, September 3, 2024

Indian railway jobs: இந்தியன் ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு Last date 13.10.2024 & 26.10.2024


மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்தியன் ரயில்வேயில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது ரயில்வேயில் என்டிசிபி- பிரிவில் 11,558 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். 

கல்வி தகுதி என்ன? வயது வரம்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன

 பணியிடங்கள் 

 1. Chief கமர்ஷியல் - டிக்கெட் மேற்பார்வையாளர் - 1,736 பணியிடங்கள்

 2. ஸ்டேஷன் மாஸ்டர் - 994

 3. சரக்கு ரயில் மேலாளர் - 3,144 

4. ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டென்ட் - டைப்பிஸ்ட் - 1,507

 5. சீனியர் கிளார்க் - டைப்பிஸ்ட் - 732

 6. கமர்ஷியல் - டிக்கெட் கிளார்க் - 2,022 

7. கணக்கு எழுத்தர் - தட்டச்சர் - 361
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
8. ஜூனியர் கிளார்க் - தட்டச்சர் - 990 

9. ரயில்கள் கிளார்க் - 72 

 மொத்தம் 9 வகையான பணியிடங்களில் 11,558 பேர் தேர்வு செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 கல்வி தகுதி: 
வணிக தலைமை - டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரயில் மேனேஜர், ஜூனியர் அக்கவுண்டண்ட் அஸ்சிஸ்டண்ட் டைபிஸ்ட் , சீனியர் கிளர்க் பணியிடங்களுக்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்து இருக்க வேண்டும்.

 சீனியர் கிளர்க், கமர்ஷியல், அக்கவுண்ட்ஸ் கிளர்க், ஜூனியர் கிளர்க், ரயில் கிளர்க் பணியிடங்களுக்கு 12ம் வகுப்பு தேர்ச்சியும், 


 டைப்பிஸ்ட் பணிக்கு தட்டச்சு திறனும் முக்கியம்.

 வயது வரம்பு

 டிகிரி தகுதி கொண்ட பணியிடங்களுக்கு 18 முதல் 36 வயது 12ம் வகுப்பு தகுதி கொண்ட பணியிடங்களுக்கு வயது 33 எஸ்.சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வுகள் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 மாதச் சம்பளம் : 

 Chief கமர்ஷியல் - டிக்கெட் மேற்பார்வையாளர் : மாதம் ரூ. 35,400/-

 ஸ்டேஷன் மாஸ்டர் - மாதம் ரூ. 35,400/- 

 சீனியர்கிளர்க் - மாதம் ரூ. 29,200/- 
 கமர்ஷியல் டிக்கெட் கிளர்க் - மாதம் 21,700/- 

 இதர பணியிடங்களுக்கு மாதம் ரூ.19,900 வழங்கப்படும். 

 தேர்வு முறை: சிபிடி எனப்படும் கணிணி வழிதேர்வு 2 கட்டமாக நடத்தப்படும். டைப்பிங் பணிகளுக்கு டைப்பிங் திறன் தேர்வு உண்டு. எழுத்து தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு / மருத்துவ பரிசோதனைக்கு அழைக்கப்படுவார்கள்.

 நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெறும்

 விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க

 


அவகாசம் வரும் 14-09-2024 அன்று தொடங்குகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.10.2024 12 ம் வகுப்பு தகுதி கொண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் 21.09.2024 டிகிரி தகுதி கொண்ட பணியிடங்களுக்கு 26.10.2024 அன்று விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.

No comments:

Post a Comment