இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு. - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, December 20, 2022

இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு.

 ipo.jpg?w=360&dpr=3

இந்திய அஞ்சல் துறையின் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தமிழக அஞ்சல் ஊர்தி சேவை திறன்வாய்ந்த கைவினைக் கலைஞர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்தகு தகுதியானவர்களிடம் இருந்து வரும்

ஜனவரி 9 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


வேலைவாய்ப்பு செய்திகள் 2022
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 


பணி: Skilled Artisans - 07


1. M.V.Mechanic(Skilled) - 4

2. M.V.Electrician(Skilled) - 1

3. Copper and Tinsmith (Skilled) - 1

4. Upholster(Skilled) - 1


சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200


வயதுவரம்பு: 1.7.2022 தேதியின்படி 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகை கோரும் இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி சலுகைகள் வழங்கப்படும்.


தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடைய துறைகளில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 


எம்.வி.மெக்கானிக் பணிக்கு விண்ணப்பிப்போர் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: தொழிற் முறைத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை: https://www.indiapost.gov.in இல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு பதிவு அஞ்சல், விரைவு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.


முகவரி: மூத்த மேலாளர், அஞ்சல் ஊர்தி சேவை, எண்.37, கிரீம்ஸ் சாலை, சென்னை - 600 006


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 9.1.2023


மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment