இந்திய உணவுக்கழகத்தில். வேலை வாய்ப்பு காலிப்பணியிடங்கள் :5043 - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, October 4, 2022

இந்திய உணவுக்கழகத்தில். வேலை வாய்ப்பு காலிப்பணியிடங்கள் :5043

இந்திய உணவுக் கழகம் (Food Corporation of India) அறிவித்த 5043 காலிப்பணியிடங்களுக்கான (NON-EXECUTIVES) விண்ணப்பிக் காலக்கெடு நாளை மறுநாளுடன் முடிவடைகிறது. எனவே, விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கக் குறிப்பிட்டுள்ள கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே, போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். காலியிடங்கள்: 5043 பொது நிபந்தனைகள்: நாடு முழுவதும் உள்ள இந்திய உணவுக் கழகத்தின் 6 (தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு, வடகிழக்கு) மண்டலங்களில் இந்த ஆள் சேர்க்கை நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு மண்டலத்திலும், இளநிலை பொறியியாளர் சிவில் (A); இளநிலை பொறியியாளர் - எலெக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் என்ஜினியரிங் (B); சுருக்கெழுத்தாளர் நிலை- 2 (C); உதவியாளர் நிலை III - பொது (D); உதவியாளர் நிலை III- கணக்கு (E); உதவியாளர் நிலை III - டெக்கினிக்கல் (F); உதவியாளர் நிலை III- உணவு தானிய கிடங்குகள் (G); உதவியாளர் நிலை III (இந்தி) - H ஆகிய பதிவுகள் நிரப்பப்பட உள்ளன. டெல்லி, பஞ்சாப், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களை உள்ளடக்கிய வடக்கு மண்டத்தில் 2388 காலியிடங்களும் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களை உள்ளடக்கிய தெற்கு மண்டத்தில் 989 காலியிடங்களும் பீகார், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களை உள்ளடக்கிய கிழக்கு மண்டலத்தில் 768 காலியிடடங்களும் குஜராத், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தில் 713 காலியிடங்களும் அசாம், மணிப்பூர் போன்ற மாநிலங்களை உள்ளடக்கிய தென்கிழக்கு மண்டலத்தில் 185 காலியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. 

விண்ணப்பதாரர் ஏதேனும் ஒரு மண்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு காலிப்பதவிகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இளநிலை பொறியியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.08.2022 அன்று 28-க்கு கீழ் இருக்க வேண்டும். சுருக்கெழுத்தாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.08.2022 அன்று 25-க்கு கீழ் இருக்க வேண்டும். உதவியாளர் நிலை-III பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.08.2022 அன்று 27-க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதரபிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்களாவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர். கல்வி: உதவியாளர் நிலை- III பொது & உணவுத் தானிய கிடங்குகள் பதவிக்கும், சுருக்கெழுத்தாளர் பதவிக்கும் உயர்கல்வியில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதர பதவிகளுக்கு தொடர்புடைய துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.500ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. தெரிவு செய்யப்படும் முறை: இரண்டு கட்டங்களாக நடைபெறும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.
www.fci.gov.in என்ற இணையதளம் வாயிலாக, வரும் 5ம் தேதி மாலை 4 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். அதன்பின், ஆன்லைன் விண்ணப்பச் சேவை முற்றிலும் நிறுத்தப்படும்.

No comments:

Post a Comment