Tamilnadu: குழந்தைகளிடையே வேகமாக பரவும் இன்ப்ளூயன்சா காய்ச்சல்! அறிகுறி என்ன? இதோ வழிகாட்டு நெறிமுறை - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, September 16, 2022

Tamilnadu: குழந்தைகளிடையே வேகமாக பரவும் இன்ப்ளூயன்சா காய்ச்சல்! அறிகுறி என்ன? இதோ வழிகாட்டு நெறிமுறை



மதுரை: வறட்டு இருமல், தொண்டை வலி, தலைவலி, மூக்கடைப்பு, உடல் வலி, உடல் சோர்வு ஆகியவை இன்புளுயன்சா காய்ச்சலின் அறிகுறிகள் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த அறிகுறிகளுடன் பொதுமக்கள் வந்தால் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான சிகிச்சை வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தமிழக சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் தற்போது இன்புளுயன்சா என்ற புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. மருத்துவமனைகளில் ஏராளமான குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்ரமணியன், தமிழகத்தில் தற்போது புதுவகை காய்ச்சல் பரவி வருகிறது. தற்போது பரவும் காய்ச்சலின் உண்மை நிலையை அறிவிக்க இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தை பொருத்தவரை இன்புளுயன்சா காய்ச்சல் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை அரசு மருத்துவமனையில் 202 பேரும், தனியார் மருத்துவமனையில் 215 பேரும், வீடுகளில் 54 குழந்தைகள் என மொத்தம் 282 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இன்புளுயன்சா காய்ச்சல்


இன்புளுயன்சா பற்றி மக்கள் பதற்றப்பட வேண்டிய சூழல் இல்லை என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினார் . இது பற்றி அனைத்து அரசு மருத்துவமனைக்கும் சுற்றிக்கை விடப்பட்டு உள்ளது. அதில் எந்தவித காய்ச்சலாக இருந்தாலும் எச்சரிக்கை வேண்டும். மருந்து கடைகளிலும் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் இன்புளுயன்சா போன்ற வைரசுக்கு மருந்து கொடுக்கக்கூடாது. மழைக்காலம் என்பதால் மக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.


வழிகாட்டு நெறிமுறை


இதனிடையே இன்புளுயன்சா காய்ச்சல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அனைத்து சுகாதாரத்துறை மாவட்ட அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.


அறிகுறிகள் என்னென்ன?


பொது சுகாதாரத்துறை இயக்குனர் எழுதியுள்ள அந்த கடிதத்தில் திடீர் வறட்டு இருமல், தொண்டை வலி, தலைவலி, மூக்கடைப்பு, உடல் வலி, உடல் சோர்வு ஆகியவை இன்புளுவென்சா காய்ச்சலின் அறிகுறிகள் என்று தெரிவித்துள்ளார். மேற்கண்ட அறிகுறிகளுடன் பொதுமக்கள் வந்தால் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான சிகிச்சை வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


யாரை பாதிக்கும்?




லேசான அறிகுறிகள் கொண்டவர்கள் 48 மணி நேரத்திற்கு மருத்துவ கண்காணிப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 5 அல்லது 5 வயதுக்குட்பட்ட பச்சிளம் குழந்தைகள், தீவிரமான சுவாச பிரச்சனை கொண்டவர்கள், நீரிழிவு மற்றும் உடல் பருமன் கொண்டவர்கள் என எளிதில் நோய்த்தொற்றுக்கு ஆளாகக்கூடிய நபர்களுக்கு அறிகுறிகள் கண்டறிந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என்றும் ஆசெல்டமிவிர் மற்றும் தேவைப்படும் மருந்துகளை வழங்க வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளார்

No comments:

Post a Comment