ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகள் இருக்கா ? நன்மை தீமைகள் என்ன ? - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, July 29, 2022

ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகள் இருக்கா ? நன்மை தீமைகள் என்ன ?

 நம்மில் பலருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகள் இருக்கும். ஆனால் எத்தனை கணக்குகள் ஒருவர் வைத்திருக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் வைத்திருப்பதால் என்னென்ன நன்மை தீமை? வாருங்கள் பார்க்கலாம். சாதரணமாக ஊழியராக இருப்பவர்கள் சம்பள கணக்கு, சேமிப்பு கணக்கு, கடனுக்கு ஒரு கணக்கு என பலவிதமான கணக்குகள் வைத்திருப்பார்கள். ஆனால் இப்படி வைத்திருப்பதால் எந்த மாதிரியான விஷயங்கள் கவனிக்க வேண்டும். அதிலும் டிஜிட்டல் வங்கி சேவைகள் வந்த பிறகு, குறிப்பாக யுபிஐ சேவைகள் என வந்த பிறகு வங்கி சேவைகளை பற்றி பெரிதாக யோசிப்பதில்லை.


 என்னென்ன நன்மைகள்? 


ஏடிஎம்-களில் இருந்து டெபிட் கார்டு மூலமாக நீங்கள் அதிக பணம் எடுப்பதை வங்கிகள் கட்டுப்படுத்துகின்றன. இதனால் பல கணக்குகள் வைத்திருந்தால் அது பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் நீங்கள் நினைக்கும்போது தேவைப்படும் தொகையினை எடுத்துக் கொள்ள முடியும். இதே ஒரே வங்கிக் கணக்கு தான் பயன்படுத்துகிறீர்கள் எனில், வங்கிக்கு சென்று தான் குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணம் எடுக்க முடியும். 


 சலுகைகள் & நன்மைகள்

  பெரும்பாலான வங்கிகள் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு சேவைகளை வழங்குகின்றனர். சில வங்கிகள் போனஸ், சலுகைகள், பாயிண்டுகள் என பல சலுகைகளை தருகின்றன. ஆக இதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும். 

 ஏடிஎம் பரிவர்த்தனை 

ஏடிஎம்மில் பரிவர்த்தனை செய்யும்போது ஒரு வங்கியில் குறிப்பிட்ட பரிவர்த்தனைகள் மட்டுமே இலவசமாக அனுமதிக்கப்படுகின்றன. ஆக குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு பிறகு உங்களுக்கு கட்டணங்களை விதிக்கின்றன. இதே ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கு எனும்போது மாற்றி எடுத்துக் கொள்ளலாம். இது கட்டணங்களை தவிர்க்க உதவும்.


 டெபாசிட் இன்சூரன்ஸ் வசதி

 மொத்த முதலீடு 1 லட்சம் ரூபாய்க்கு மேல் அதிகரிக்காமல் இருக்க நீங்கள் பல வங்கிகளில் டெபாசிட் செய்து வைக்கலாம். இதற்கு டெபாசிட் இன்சூரன்ஸ் மூலமும் பயன் பெறலாம். ஆக இதன் மூலமும் உங்கள் டெபாசிட்டின் பாதுகாப்பினை அதிகரிக்கலாம். உங்கள் பணமும் பாதுகாப்பாக இருக்கும்.

  பிரச்சனைகள் என்ன? 

பொதுவாக வங்கி கணக்குகளில் இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று மினிமம் பேலன்ஸ். மினிமம் பேலன்ஸ் வைத்திருக்காவிடில் அதற்கு அபராதமும் விதிக்கப்படுகின்றது. ஆக ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் வைத்திருக்கும்போது இது ஒரு பெரும் பிரச்சனையாகவே இருக்கும். அதிலும் ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட வங்கிகளில் மினிமம் பேலன்ஸும் அதிகம். அபராதமும் அதிகம். வட்டி விகிதம் வட்டி விகிதம் உங்கள் சேமிப்பிற்கான வட்டி விகிதம் என்பது வங்கிக்கு வங்கி மாறும். அதிக வட்டி கிடைக்கும் வங்கியினை விடுத்து, மற்ற வங்கிகளில் பணத்தை போடுவது என்பது உங்களது லாபத்தினை குறைக்க வழிவகுக்கும். ஆக உங்கள் வங்கிக் கணக்கில் என்ன வட்டி விகிதம் என்ன என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படலாம்.

 கணக்குகளை நிர்வகித்தல்

 பல வங்கி கணக்குகள் வைத்திருப்பது மிக கடினமானதாக இருக்கலாம். ஒவ்வொரு கணக்கிற்கும் ஒவ்வொரு நெட்பேங்கிங், மொபைல் பேங்கிங், ஏடிஎம் பயன்படுத்தலாம். ஆக இதனை அடிக்கடி மாற்றி மாற்றி பயன்படுத்தினால் இது குழப்பத்தினை ஏற்படுத்தலாம். ஒரு வேளை நாம் ஏதோ ஒன்றில் எழுதி வைக்கலாம் என்றாலும், அது திருடப்படுவதற்கான வாய்ப்பாகவும் பார்ககப்படுகிறது. 

 கட்டணங்கள் பல 

 அதேபோல கட்டணங்கள் என்பது பல வங்கிகளிலும் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம். ஏடிஎம் கட்டணம், வருடாந்திர பராமரிப்பு கட்டணம் என பலவும் அடங்கும். ஆக பல கணக்குகளை பராமரிக்கும்போது இதனை கருத்தில் கொண்டு செயல்படுவது நல்லது

No comments:

Post a Comment