என்.ஜி.ஓ. சங்கம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, May 4, 2022

என்.ஜி.ஓ. சங்கம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம்

 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்து இலங்கை நிவாரணத்திற்கு வழங்க வேண்டும் என என்.ஜி.ஓ. சங்கம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் கொடுத்துள்ளது.
பணம்

அதன் அடிப்படையில் இலங்கை தமிழர்களுக்கு உதவ தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் முன் வந்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்து இலங்கை நிவாரணத்திற்கு வழங்க வேண்டும் என அச்சங்கம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் கொடுத்துள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் மாநில தலைவர் இரா.சண்முகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நூற்றாண்டு காலம் பாரம்பரியமிக்கதும், தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொது சங்கங்களில் முதன்மைச் சங்கமாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் செயல்பட்டு வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் 2021-ல் பெருவாரியான மக்களின் பெரும் ஆதரவுடன் வெற்றி பெற்று ஓராண்டினை உலகம் போற்றும் வகையில் நிறைவு செய்து இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டினை சிறப்பான பாதையில் கொண்டு செல்லும் முதல்-அமைச்சருக்கு இதயங்கனிந்த வாழ்த்துக்களை தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இக்கடினமான சூழ்நிலையில் இலங்கைக்கு 40 ஆயிரம் டன் உணவு பொருட்கள், பால் பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் ஆகியவற்றினை இலங்கையில் உள்ள தொப்புள் கொடி உறவுகளுக்கு அளிக்க வேண்டும் எனவும், அதற்காக தங்களது பங்களிப்பினை முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியாக அளிக்க வேண்டும் என்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளின் அடிப்படையில் இலங்கை மக்களை பாதுகாக்க எடுக்கப்படும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தமிழக அரசில் பணிபுரியும் அரசு அலுவலர் ஆசிரியர்களது ஒருநாள் ஊதியத்தினை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிட இசைவு தெரிவித்து உள்ளோம்.

எனவே தமிழக அரசில் பணிபுரியும் அரசு அலுவலர், ஆசிரியர்களது ஒருநாள் ஊதியத்தினை இந்த மாதம் சம்பளத்தில் பிடித்துக் கொள்வதற்கான அரசாணை பிறப்பித்து உத்தரவிடுமாறு முதல்-அமைச்சரை தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment