பொதுத் தேர்வுக்கான பாடப் பகுதி எது? குழப்பம் தீர்க்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, April 6, 2022

பொதுத் தேர்வுக்கான பாடப் பகுதி எது? குழப்பம் தீர்க்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை

``` ```

 குழப்பம் தீர்க்க தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு கோரிக்கை


10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கு உரிய பாடப் பகுதியாக  கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட முன்னுரிமை பாடப் பகுதியே இவ்வாண்டிற்கும் என அறிவிக்கப்பட்டு அதன் அடிப்படையில் ஆசிரியர்கள் பாடம் நடத்தி வந்தனர்  கொரானா நோய்த்தொற்றால் நேரடி வகுப்புகள் நடை பெறாததால் மாணவர் மத்தியில் கற்றல் அடைவை  அடைவதில் பெரும் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது ஆகவே முன்னுரிமை பாடத்திட்டத்தை நடத்தி முடிப்பதே  சிரமமான சூழ்நிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டது தேர்வுக்கான பாடத்திட்ட அளவை மேலும் குறைக்க வேண்டும் என்பது குறித்த கோரிக்கைகள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், முதன்மைச் செயலாளர், பள்ளிக்கல்வி ஆணையர், தேர்வுத்துறை இயக்குநர் ஆகியோருக்கு தொடர்ந்து சென்ற வண்ணம் இருந்தது இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மாண்புமிகு அமைச்சர் ``` ```அவர்கள் நடத்தப்படாத பாட ங்களிலிருந்து தேர்வுக்கு வினாக்கள் கேட்கப்படாது  எனத் தெரிவித்துள்ளார்.

இது ஆசிரியர் மாணவர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முன்னுரிமை பாடப் பகுதி முழுவதும் பொதுத்தேர்வுக்கு உள்ளதா அல்லது திருப்புதல் தேர்வுக்கு கேட்கப்பட்ட பாடப் பகுதி மட்டும் பொதுத்தேர்வுக்கு உள்ளதா  என்பது குறித்து தெளிவான விளக்கத்தையும் தேர்வுக்கான கால அவகாசம் குறைவாக உள்ளதால் இரு திருப்புதல் தேர்வு பாடப் பகுதி மட்டுமே பொதுத்தேர்வுக்கு கேட்கப்பட வேண்டும் என்ற பெரும்பாலான மாணவர்களின் கருத்தை பரிசீலனை செய்து காலம் தாழ்த்தாமல் தேர்வுத்துறை அறிவிக்க வேண்டும் என தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு கேட்டுக் கொள்கிறது

``` ```

No comments:

Post a Comment