அதிகரிக்கும் புகார்கள்: ஆன்லைன் டியூஷன் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள். - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, January 4, 2022

அதிகரிக்கும் புகார்கள்: ஆன்லைன் டியூஷன் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள்.

 ஆன்லைன் டியூஷன் நிறுவனங்கள் தவறான முறையில் நடந்து கொள்வதாகக் குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ள நிலையில், இது தொடர்பாகக் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.ஆன்லைன் டியூஷன் நிறுவனங்கள் ஏழைக் குடும்பங்களைக் குறிவைத்து, மோசமான மார்க்கெட்டிங் நடவடிக்கை மூலம் அவர்களிடம் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளதாகப் பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.இது தொடர்பாக மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.  தர்மேந்திர பிரதான்இந்நிலையில், இது தொடர்பாகக் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். ஏழை மாணவர்கள் இணையதளங்களில் பல்வேறு படிப்புகளைப் படிக்க இலவச கூப்பன்களை வெளியிடும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் () சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.விரைவில் கட்டுப்பாடுகள்அப்போது பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், "டெக் கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் கொள்கையை மூன்று அமைச்சகங்கள் இணைந்து உருவாக்கி வருகின்றன. அதில் சில டெக் நிறுவனங்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களைச் சுரண்டி பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன. இதுபோன்ற நிறுவனங்கள் மீது அரசு எந்தக் கட்டுப்பாடும் விதிக்காது. ஆனால் மக்களிடம் எந்த வகையான சுரண்டலையும் இதுபோன்ற டெக் நிறுவனங்கள் நடத்துவதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.3 அமைச்சகங்கள்கடந்த சில மாதங்களாகவே சில கல்வி சார்ந்த டெக் நிறுவனங்கள் கிராமப் புறங்களில் உள்ள மாணவர்களைச் சுரண்டுவதாக எங்களுக்குப் புகார்கள் வந்துள்ளன. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தாங்களாக முன்வந்து பணம் செலுத்துவது பிரச்சினை இல்லை. ஆனால் யாரையும் ஏமாற்றி பணம் பறிக்கக் கூடாது. இது தொடர்பாக முறையான அறிவுறுத்தல்களை வெளியிடப் பள்ளி மற்றும் உயர் கல்வி நிறுவனங்களை நான் அறிவுறுத்தியுள்ளேன். அதேபோல ஐடி துறை அமைச்சகம், சட்டத்துறை அமைச்சகத்திடமும் இது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம்.ஆன்லைன் கல்வி நிறுவனங்கள்டேட்டா தான் புதிய பெட்ரோல். எனவே, இதுபோன்ற நிறுவனங்கள் சுரண்டுவதைக் காட்டிலும் புதுமையான ஐடியாக்களை வைத்து வளரலாம். இதுபோன்ற கல்வி சார்ந்த டெக் நிறுவனங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். இவை வளர வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். ஆனால் அவர்கள் சட்டத்திற்குப் புறம்பான செயல்களைச் செய்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்றார்.கார்த்தி சிதம்பரம்ஆன்லைன் கல்வி நிறுவனங்கள், குறிப்பாகநிறுவனம் ஏழைக் குடும்பங்களைக் குறிவைத்து மோசமாக நடந்து கொள்வதாக காங். எம்பி கார்த்தி சிதம்பரம் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். இது தொடர்பாகக் குளிர்காலக் கூட்டத்தொடர் சமயத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய அவர், "பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு நாம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறோம். அதன் பாடத்திட்டங்கள் முழுமையாக அரசு அமைப்புகள் மூலம் சோதிக்கப்படுகின்றன. இருப்பினும், ஆன்லைன் டியூஷன் நிறுவனங்களுக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. இந்த நிறுவனங்களின் மதிப்பு என்பது நமது நாடு கல்விக்காக ஒதுக்கும் நிதியைக் காட்டிலும் அதிகம்.என்ன செய்கின்றனஇதுபோன்ற கல்வி நிறுவனங்கள் அளிக்கும் பாடத்திட்டங்களை யாரும் கண்காணிப்பதில்லை. இவை மிக மோசமான மார்கெட்டிங் யுக்தியில் களமிறங்குகின்றன. தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி முறையை அளிக்க வேண்டும் என்று விரும்பும் ஏழை பெற்றோரைக் குறி வைக்கும் இவர்கள், இதுபோன்ற கோர்ஸ்களை வாங்க வைக்கிறார்கள். மேலும், ஒரு முறை கோர்ஸ்களை சேர்ந்த பின்னர், ஆட்டோ டெபிட் மூலம் இவர்களைத் தொடர்ந்து அந்த பிடியிலேயே வைத்துள்ளனர். அதில் இருந்து வெளியே வர முயன்றாலும் விடுவதில்லை. இதில் சில நிறுவனங்கள் வட்டிக்கு விடுபவர்களைப் போல நடந்து கொள்கிறார்கள்" என்று பேசியிருந்தார்.

No comments:

Post a Comment