தினம் ஒரு தகவல் ‘ஸ்பிங்ஸ்’ சிற்பங்கள் - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, October 19, 2021

தினம் ஒரு தகவல் ‘ஸ்பிங்ஸ்’ சிற்பங்கள்

‘ஸ்பிங்ஸ்’ சிற்பங்கள் எகிப்து பிரமிடுகள் என்றதும், பாலைவனம், பிரமாண்டமான பிரமிடுகள், சிங்க உடலும் மனிதத்தலையும், பறவையின் சிறகுடன் கூடிய சிற்பம் ஆகியவை சட்டென ஞாபகத்துக்கு வரும் அல்லவா...! சிங்க உடல், மனிதத் தலை, பறவையின் சிறகுடன் காட்சியளிக்கும் பிரமாண்டமான சிற்பத்தின் பெயர் என்ன தெரியுமா? 

 ஸ்பிங்ஸ்...! அதாவது, ‘ஸ்பிங்ஸ்’ பண்டைய எகிப்து புராணங்களில் இடம்பெற்ற ஒரு கற்பனை விலங்கு. எகிப்தில் வழிபாட்டுதலங்களிலும், அரசர்களை புதைக்கும் சமாதிகளிலும் இந்த ஸ்பிங்ஸ் சிற்பங்களை காவல் தெய்வங்களாக உருவாக்கினார்கள். ஸ்பிங்ஸ் 3 வகைகளில் உள்ளன. சிங்க உடலும் மனிதத்தலையும் கொண்டது, ‘அண்ட்ரோ ஸ்பிங்ஸ்’. சிங்க உடலும் செம்மறி ஆட்டு தலையும் கொண்டது


‘கிரியோ ஸ்பிங்ஸ்’. சிங்க உடலும் வல்லூறு பறவையின் தலையும் கொண்டது ‘ஹையராகோ ஸ்பிங்ஸ்’. ஸ்பிங்ஸ் சிற்பத்திலேயே பெரியதும் புகழ்பெற்றதுமான சிற்பம், எகிப்தில் கீசாவில் உள்ளது. இது நைல் நதியின் மேற்கு கரையில் அமைந்துள்ள சிற்பமாகும். இந்த சிற்பத்தில் உள்ள முகம் எகிப்தில் ஆட்சி செய்த காப்ராவுடையது என்று நம்பப்படுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஸ்பிங்ஸ் சிற்பம், எகிப்தின் தேசிய சின்னமும்கூட. எகிப்து நாட்டு தபால் தலைகள், நாணங்களிலும் இந்த உருவம் பதிக்கப்பட்டுள்ளது. கிரேக்க நகரமான தீப்சை காக்கும் விலங்குகளாக ஸ்பிங்ஸ் புராணக் காலத்தில் இருந்துள்ளது. 

பண்டைய தீப்ஸ் நகருக்குள் நுழைய விரும்பும் ஒவ்வொரு பயணியும் ஸ்பிங்ஸ் சொல்லும் புதிருக்கு விடையளிக்க வேண்டும். பதிலை சரியாகச் சொன்னால் ஊருக்குள் போகலாம். பதில் சொல்லாவிட்டால் பயணியை ஸ்பிங்ஸ் கொன்றுவிடுமாம். 4 கால்களில் பிறந்து, 2 காலுடையதாக வளர்ந்து, பின்னர் 3 கால்களுடையதாக மாறும் உயிர் எது? என்ற விடுகதைைய ஸ்பிங்ஸ் கேட்டதாக ஒரு கதை உண்டு. 

புராண காலத்து மன்னரான ஈடிபஸ்தான், இந்த விடுகதைக்கு விடையை கண்டுபிடித்தார். அந்த விடை என்ன தெரியுமா? மனிதன். அதாவது குழந்தையாக இருக்கும் போது கைகளையும் கால்களாக்கி தவழ்கிறான். வளர்ந்தபிறகு 2 கால்களில் நடக்கிறான். முதுமையில் ஊன்று கோலையும் சேர்த்து, 3 கால்களில் நடக்கிறான் என்பதே அந்த விடை.

No comments:

Post a Comment