20 மாதங்களுக்கு பின் தொடக்க பள்ளிகளை திறக்க கர்நாடக அரசு முடிவு - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, October 19, 2021

20 மாதங்களுக்கு பின் தொடக்க பள்ளிகளை திறக்க கர்நாடக அரசு முடிவு

20 மாதங்களுக்கு பின் தொடக்க பள்ளிகளை திறக்க கர்நாடக அரசு முடிவு கர்நாடகாவில் கோவிட் பெருந்தொற்று பரவலால் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தொற்று பரவல் குறைந்ததை அடுத்து, அதே ஆண்டின் இறுதியில் 6 - 12ம் வகுப்பு வரை பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டன. 

ஆனால், 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள தொடக்கப் பள்ளிகள் திறக்கப்படவில்லை. கடந்த மார்ச் மாதம் கோவிட் 2வது அலையால் அங்கு மீண்டும் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன. மீண்டும் தொற்று பரவல் குறைந்ததை அடுத்து, கடந்த செப்., மாதம் முதல் 6 - 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன.இந்நிலையில், கர்நாடக பள்ளி கல்வித்துறை அமைச்சர் நாகேஸ் கூறுகையில், ‛‛1 முதல் 5ம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகள் வரும் 25ம் தேதி திறக்கப்படும். 

முதல் ஒரு வாரம் இந்த பள்ளிகள் மதியம் வரை செயல்பட அனுமதி அளிக்கப்படும். அதன் பிறகு பள்ளிகள் முழுமையாக செயல்படும். நவ., 1ம் தேதி முதல் பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படும். வகுப்பறைகளில் 50 சதவீத குழந்தைகளை மட்டுமே அமர வைக்கப்படுவர்,'' என்றார்.

No comments:

Post a Comment