வருகிற 1-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதில் எந்தவித மாற்றமும் இல்லை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, October 25, 2021

வருகிற 1-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதில் எந்தவித மாற்றமும் இல்லை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

வருகிற 1-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். எந்தவித மாற்றமும் இ்ல்லை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தஞ்சையில் நிருபர்களிடம் கூறியதாவது:- 

தமிழகத்தில் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுமா? என கேட்கிறார்கள். தீபாவளிக்கு பிறகு திறக்கலாம் என சொல்கிறார்கள். விருப்பப்படுபவர்கள் தங்கள் குழந்தைகளை 1-ந்தேதி முதல் பள்ளிக்கு அனுப்பலாம். இல்லையென்றால் தீபாவளி பண்டிகைக்கு பிறகு அனுப்பலாம். ஆனால் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுவதில் எந்தவித மாற்றமும் இல்லை. 50 ஆயிரம் தன்னார்வலர்கள் கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்கள் பள்ளிக்கு செல்லாததால் கற்றல் இடைவெளி உள்ளது. அதை பூர்த்தி செய்ய இல்லம் தேடி கல்வி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாலை நேர வகுப்பாக தன்னார்வலர்களை கொண்டு இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. 20 மாணவர்களுக்கு ஒருவர் பயிற்சி அளிக்க உள்ளனர். 1 லட்சத்து 70 ஆயிரம் தன்னார்வலர்கள் தேவைப்படுகிறார்கள். தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 34 லட்சம் மாணவர்கள் உள்ளனர். அந்தந்த பகுதியில் பொதுவான இடம் அல்லது சமுதாய கூடத்தில் பயிற்சி அளிக்கப்படும். 1-ந்தேதி முதல் இந்த பயிற்சி தொடங்கும். இதனை விரைவில் முதல்-அமைச்சர் தொடங்கி வைப்பார். இதுவரை 50 ஆயிரம் தன்னார்வலர்கள் பதிவு செய்து உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment